கோவை:மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க விருப்பமுடைய அணிகளுக்கு, மாவட்ட கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, கோவையின் பல்வேறு பகுதிகளில் நடக்கவுள்ளது.12 வயதுக்குட்பட்ட பிரிவில், 'ஏ.வி., லட்சுமணன் செட்டியார் டிராபிக்கான' போட்டியும்; 14 வயதுக்குட்பட்ட பிரிவில், 'ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் மெட்ரோ' போட்டியும்; 16 வயதுக்குட்பட்ட பிரிவில், 'டி.எஸ்.எஸ்&கோ டிராபிக்கான' போட்டியும்; வயது வரம்பற்றோர்களுக்கான 'கோயம்புத்துார் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 டிராபி' போட்டியும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுடைய பள்ளி அணிகள், மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று வரும், 7ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 094420- 02622, 80729 48889 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.