செஸ் போட்டி; அசைவுகளால் அசத்தல்

Added : டிச 04, 2019
Advertisement

கோவை:மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பரிசுப்பொருட்களை தட்டி சென்றனர்.கணபதி, செஸ் ஹெல்பர்ஸ் கிளப் சார்பில், 2வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி, கலைமகள் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. 240 பேர் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கான, 8 வயது, 10, 12, 16 மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.எட்டு வயதுக்கு உட்பட்ட ஹரிஷ், குகன்ராமநாதன்; 10 வயது பிரிவில் ராகுல், வைஷ்ணவி; 12 வயது பிரிவில், அகிலேஷ், விஜய்பாரதி; 16 வயது பிரிவில், முகேஷ், பரத்; ஓபன் பிரிவில் நந்தகுமார், எஸ்வந்த் தேவ் குமார் ஆகியோர் முதல் இரண்டுகளை பிடித்தனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பரிசுப்பொருட்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X