தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் :தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

Added : டிச 04, 2019
Advertisement
ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் :தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

மதுரை, ''உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்,'' என மதுரையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் கலெக்டர் வினய் அறிவுறுத்தினார்.தேர்தல் அலுவலர்கள், உதவி அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமை துவக்கி கலெக்டர் பேசியதாவது: தேர்தலுக்கான வழிகாட்டி கையேடுகளை படித்து செயல்பட வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். வாக்காளர்கள் எளிதில் சென்று ஒட்டளிக்க வசதியாக வழித்தடங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்படும் ஓட்டுப்பெட்டிகள், ஓட்டுச்சீட்டுக்களை உறுதி செய்ய வேண்டும் என்றார்.கூடுதல் கலெக்டர் பிரியங்கா, டி.ஆர்.ஓ., செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜசேகரன் (பொது), வீராச்சாமி (உள்ளாட்சி தேர்தல்), வானதி( ஊராட்சி), கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ், ஆவின் பொது மேலாளர் ஜனனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X