பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் போல் பார்த்தீனியமும் அபாயம் அழிக்க வழிகாட்டுகிறது வேளாண் பல்கலை

Added : டிச 04, 2019
Advertisement

கோவை:பார்த்தீனியம் வளரும் நிலங்களில், வேறு எதையும் வளர விடுவதில்லை. மண்ணின் ஊட்டச்சத்துகளை அழித்துவிடுகிறது. இச்செடியை தொட்டால் தோலில் அரிப்பு, தடிப்பு உண்டாவதுடன்; இதன் பூக்களால் ஆஸ்துமா பிரச்னைகளும் ஏற்படுகிறது.இச்செடி தற்போது விளைநிலங்களிலும் வளர்ந்து, பயிர்களுக்கு மட்டுமின்றி பயிர்களுக்கும், கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வேளாண் பல்கலை உழவியல் துறை விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து, 'பார்த்தீனியம் ஒழிப்பு', என்ற திட்டத்தின் கீழ், பல்வேறு விழிப்புணர்வு பணிகளை துவக்கியுள்ளனர்.இதுகுறித்து, உழவியல் துறைத்தலைவர் சின்னதுரை கூறியதாவது:பார்த்தீனியம் பயிர், விலங்குகளுக்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகம் முழுவதும் பார்த்தீனியம் கடுமையாக பரவியுள்ளது. இதை, அகற்ற அரசு கோடிக்கணக்கில் அரசு செலவிட வேண்டியிருக்கும். பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள் ஈடுபாட்டுடன் ஒத்துழைத்தால், இதனை கட்டுப்படுத்தலாம்.
ஒரு ஆண்டு விதை விழுந்தால், ஏழு ஆண்டுகள் செடிகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும் தன்மை கொண்ட இச்செடி, விரைவில் பிளாஸ்டிக் போன்று நம்மை அச்சுறுத்தவுள்ளது.பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளிலுள்ள, செடிகளை உடனடியாக அகற்றி, தொடர்ந்து கண்காணிக்க முன்வர வேண்டும்.இதுகுறித்த வழிகாட்டுதலுக்கு, 0422-6611246 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X