பொது செய்தி

தமிழ்நாடு

விஞ்ஞானி ஞானியாக முடியாது: ஊரன் அடிகளார்

Added : டிச 04, 2019
Advertisement

மதுரை, டிச. 4 -''சைவம், வைணவத்தில் தோன்றிய ஞானிகள் அனைவரும் விஞ்ஞானிகள். ஒரு போதும் விஞ்ஞானிகள் ஞானியாக முடியாது,'' என வடலுார் சன்மார்க்க அறிஞர் ஊரன் அடிகளார் கூறினார்.மதுரை தியாகராஜர் கல்லுாரி சார்பில் 16ம் ஆண்டு சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது. பேராசிரியர் செந்தில் நாராயணன் வரவேற்றார். தலைமை வகித்து கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் பேசியதாவது: ஒரு சித்தாந்தமும் இல்லாமல் தொலைக்காட்சி சித்தாந்த வாழ்க்கையில் இந்த தலைமுறை வந்துள்ளது. இதை மாற்ற வேண்டும். சைவ சித்தாந்தம் குறித்து ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் புரிந்து கொள்ள செய்ய வேண்டும். மலேசியாவில் அடுத்தாண்டு சைவ சித்தாந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும், என்றார்.சான்றிதழ் வழங்கி ஊரன் அடிகளார் பேசியதாவது: மதுரை தியாகராஜர் கல்லுாரி சைவத்திற்கும், தமிழுக்கும் புகலிடமாக, பாரம்பரியம், மரபை காப்பாற்றி வருகிறது. மண்ணின் சமயம் சைவம். சகோதர சமயம் வைணவம். இரண்டுக்கும் பொதுவானது வேதாந்தம். இம்மூன்றையும் சேர்த்து ஹிந்து மதம் என பெயர் வந்தது. சைவத்தின் மூலப்பொருள் உண்மை. 12 திருமுறைகள் நெற்றிக்கண் போன்றது. தேவாரம், திருவாசகம் இரு கண்களை போன்றது. இலங்கை அரசின் கல்வித்துறையில் சைவம் பாடமாக இடம் பெற்றுள்ளது, என்றார்.கல்லுாரி செயலர் தியாகராஜன். முதல்வர் பாண்டியராஜா, முன்னாள் முதல்வர் அருணகிரி, பேராசிரியர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X