தமிழ்நாடு

இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு!

Added : டிச 04, 2019
Advertisement
இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு!

தென்மாவட்டங்களுக்கான '2 தமிழ்நாடு கடற்படை என்.சி.சி.,' மதுரை கலைநகரில் உள்ளது. இதன் கமாண்டராக இருப்பவர் புதுச்சேரியைச் சேர்ந்த வி.பி.செந்தில். இந்தியா சார்பில் தனி ஒருவராக வியட்நாம், கம்போடியா, லாவோஸ் நாடுகளில் அந்நாட்டு வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்தவர். இதற்காக வியட்நாம் அரசின் சர்வதேச விருது பெற்றவர்.இவரது முயற்சியால் இந்தாண்டு மதுரை பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி (தேசிய மாணவர் படை) என்.சி.சி., மாணவர்கள் 35 பேர் தமிழக அளவில் சிறந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு அவரை சந்தித்தோம்.

n என்.சி.சி.,யால் என்ன பலன்?பத்தாம் வகுப்பு முதல் எதுவரை படிக்கிறாமோ அதற்கேற்ப இந்திய கடற்படையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. என்.சி.சி.,யில் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உண்டு. ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை.n என்.சி.சி., ஆரம்பித்ததன் நோக்கம்?போரின்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ கல்லுாரி மாணவர்களை பயன்படுத்த முடிவானது. அதற்காக 1948ல் தேசிய மாணவர் படை உருவாக்கப்பட்டு, சில அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.n பள்ளி, கல்லுாரிகளில் என்.சி.சி., பணி எப்படி?பள்ளி, கல்லுாரிகளில் என்.சி.சி., ராணுவம், கப்பல், விமானப்படை பிரிவுகளில் ஏதாவது ஒன்று இருக்கும். மதுரை உட்பட 12 மாவட்டங்களில் என்.சி.சி., கடற்படை உள்ளது. பள்ளிகளில் 1500 மாணவர்களும், கல்லுாரிகளில் 50 மாணவர்களும் இருக்கிறார்கள். இவர்களை மாநில, தேசிய அளவில் நடக்கும் பல்வகை திறனறிவு போட்டிகளில் பங்கேற்க வைக்கிறோம். இதில் வெற்றி பெறுவோர் வெளிநாடுகளில் அரசு செலவில் சென்று போர் கப்பல், போர் நடக்கும் விதம் குறித்து அறிந்து வருகிறார்கள்.n மதுரை மாணவர்கள் சென்றுள்ளார்களா?தியாகராஜர் கல்லுாரி மாணவர்கள் அன்புச்செல்வி, பாலகிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோர் தேசிய அளவில் வெற்றி பெற்றனர். இதில் அன்புச்செல்வி தவிர மற்ற இருவரும் தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், செஷல்ஸ், மடகாஸ்கர் நாடுகளுக்கு போர் கப்பலில் 40 நாட்கள் பயணித்து கடற்படையின் பணிகள் குறித்து அறிந்தார்கள்.அதேபோல் இந்திய குடியரசு தின போட்டியில் போர் கப்பல் வடிவமைக்கும் போட்டியில் வெற்றி பெற்று தியாகராஜர் கல்லுாரி மாணவர் அஸ்வின் பாலாஜி ரஷ்யா சென்றார். கப்பல்களுக்கு இடையே தொலை தொடர்பு பாதிக்கப்படும்போது கொடி சைகை மூலம் தொடர்பு கொள்ளும் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி மாணவர் லோகேஷ் வெற்றி பெற்றார். படகு இயக்க போட்டியில் தேனி எச்.கே.ஆர்.எச்., கல்லுாரி வினிதா, தியாகராஜர் கல்லுாரி தேவி தங்கம் வென்றனர்.n மதுரையில் பயிற்சி அளிக்க கடல் வசதி இல்லையே, பிறகு ஏன் இங்கு என்.சி.சி., கடற்படை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது?மதுரை மைய பகுதியாக இருப்பதால் தேர்வு செய்து இருக்கிறார்கள். ஆனால் மாணவர்களுக்கு நீர் நிலைகளில் பயிற்சி அளித்து வருகிறோம். சமீபத்தில்கூட தேனி எச்.கே.ஆர்.எச்., கல்லுாரியில் பயிற்சி அளித்தோம். இதற்காக பழுதான படகுகளை சரிபார்த்தோம். துடுப்புகளை துாத்துக்குடியில் இருந்து வாங்கி பயன்படுத்தினோம். இதுபோன்ற முயற்சியால்தான் இம்முறை 35 மாணவர்கள் வெற்றி பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்தனர்.n கடற்படையில் சேர தேவை என்னென்னஅடிப்படை ஆங்கில அறிவு அவசியம். மற்றபடி ஆர்வம் இருந்தால் போதும். நாங்களே அதற்கு வழிகாட்டுகிறோம். கடற்படையில் மட்டுமல்ல, ராணுவம், விமானப்படையிலும் சேரும் வழிமுறைகளை கூறுகிறோம்.n என்.சி.சி., இல்லாத பள்ளி, கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் எப்படி அணுகுவதுபள்ளி, கல்லுாரி நிர்வாகம் விரும்பினால் என்.சி.சி.,யை கொண்டு வரலாம். விரும்பினால் எங்களிடம் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 100 மாணவர்கள் வேண்டும், பரேடு நடத்த இடம் வேண்டும். இதுபோன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்வோம். 2 ஆயிரம் மாணவர்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், 'சீனியாரிட்டி'அடிப்படையில் அனுமதி வழங்குவோம். ஆண்டுதோறும் அவர்களின் பணியை ஆய்வு செய்வோம்.n பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் விரும்பி விண்ணப்பிக்கின்றனவா12 மாவட்டங்களில் 15 பள்ளி, கல்லுாரிகளில் என்.சி.சி., கடற்படை உள்ளது. 25 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அது ஆய்வில் உள்ளது,n மாணவர்கள் ஆர்வம் எப்படிகடந்த 55 ஆண்டுகளில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தமிழக மாணவர்கள் திறமை இருந்தும் ஜொலிக்க முடியவில்லை. இப்போது எங்களது முயற்சியால் விழிப்புணர்வு ஏற்பட்டு என்.சி.சி., யில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.n இந்திய கடற்படையில் சேருவது எப்படிஆண்டுதோறும் மே - ஜூன், நவ., - டிச.,ல் தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களில் அறிவிப்பு வெளியாகும். கல்வித்தகுதிக்கேற்ப விண்ணப்பித்து சில தேர்வுகளில் வெற்றி பெற்று சேரமுடியும். வயது தகுதி முக்கியம். இதனால் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஒருவேளை பிளஸ் 2 மாணவர் விரும்பினால் கேரளா கண்ணுார் மாவட்டம் எழிமலா எனுமிடத்தில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் சேர்ந்து 4 ஆண்டுகள் படித்து 21 வயதில் ஆபீசராக வரலாம், என்றார். கமாண்டர் வி.பி. செந்தில்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X