சம்பவம் செய்தி

தமிழ்நாடு

300 பவுன் நகை, ரூ.20 லட்சம் ரூ.80 லட்சம் கார் வரதட்சணை! கணவர் குடும்பத்தினருக்கு வலை

Added : டிச 04, 2019
Advertisement

கோவை:கோவை, ராமநாதபுரம், கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியம்; மில் அதிபர். இவரது மகள் சுகன்யா, 28; எம்.பி.ஏ., பட்டதாரி. இவருக்கும் மதுரை, தபால்தந்தி நகரை சேர்ந்த சுந்தரகிருஷ்ணன் மகன் ராஜகுரு, 31 என்பவருக்கும், 2017ல் திருமணம் நடந்தது. சுகன்யா அனைத்து மகளிர் கிழக்கு பகுதி போலீசில், ஒரு புகார் அளித்தார்.
அப்புகாரில், 'எனது கணவர் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு, பஸ்களுக்கான உபகரணங்களை சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். திருமணத்தின்போது எனது பெற்றோர், 300 பவுன் நகை, 20 லட்சம் ரொக்கம், 12 கிலோ வெள்ளி, 80 லட்சம் ரூபாய் மதிப்பு காரை வரதட்சணையாக கொடுத்தனர்.
இத்தனை கொடுத்தும், தற்போது புதிய ேஷாரூம் அமைக்க பெற்றோரிடம் மீண்டும் அதிக வரதட்சணை கேட்டு கணவர், அவரது தந்தை சுந்தரகிருஷ்ணன், தாய் உமா ஆகியோர் என்னை அடித்து வீட்டில் இருந்து, துரத்தி விட்டனர்' என குறிப்பிட்டிருந்தார்.புகாரின்பேரில் வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ், ராஜகுரு உட்பட மூன்று பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X