தமிழ்நாடு

வந்தது தெரியும்... போனது எங்கே! மண் அள்ளும் வாகனங்கள்:புதிது வாங்க விரைவில் ஒப்பந்தம்

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 வந்தது தெரியும்... போனது எங்கே! மண் அள்ளும் வாகனங்கள்:புதிது வாங்க விரைவில் ஒப்பந்தம்

கோவை:கோவையில் பிரதான சாலைகளில், மையத்தடுப்பை ஒட்டியுள்ள பகுதியில் பரவிக்கிடக்கும் மண்ணை அள்ள, ஏற்கனவே வாங்கிய மண் அள்ளும் வாகனங்களின் செயல்பாடுகள், 'மண்ணை கவ்விய' நிலையில், புதிய வாகனங்கள் வாங்க தனியார் நிறுவனத்துடன், மாநகராட்சி ஒப்பந்தம் செய்ய உள்ளது.கோவை நகரின், 36 கி.மீ., கொண்ட பிரதான சாலை ஓரங்களில், மண் கொட்டிக்கிடக்கிறது.
நெடுஞ்சாலைத்துறையில் சாலைப்பணியாளர்கள் இருந்த காலத்தில், ரோட்டில் பரவும் மண்ணை அள்ளினர். அவர்களை பணிநீக்கம் செய்தபின், அப்பணியை அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.இப்போதோ, குப்பை அள்ளுவதில் மட்டும் கவனம் செலுத்தும் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு, ரோட்டில் தேங்கும் மண்ணை அள்ளுவதில்லை. வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
சமுதாய பொறுப்பு திட்டத்தில், அவிநாசி ரோட்டில் பரவிக்கிடக்கும் மண்ணை அள்ள, ஒரு தனியார் நிறுவனம் முன்வந்தது. அதற்கு அனுமதி அளித்த மாநகராட்சி, மற்ற பகுதிகளில் தேங்கியிருக்கும் மண்ணை அள்ள ஆலோசித்தது.களத்துக்கு வந்த பழசு!2010ல் கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்தபோது, ரோட்டை சுத்தம் செய்து, மண் அள்ள, 3 அதிநவீன வாகனங்கள் வாங்கப்பட்டன. அவை பழுதானதால், பணிமனையில் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டன.2017ல் அவற்றில் ஒரு வாகனம் மட்டும் பழுது பார்க்கப்பட்டது. ஆனால், அதிக டீசல் செலவினம் ஏற்படுவதாக கூறி, மீண்டும் அதன் இயக்கம் முடக்கப்பட்டது.
இவ்வாகனம் தொடர்பாக கேள்விப்பட்ட மாநகராட்சி கமிஷனர், பழுது நீக்கப்பட்ட வாகனத்தை, மேற்கு மற்றும் தெற்கு, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில், மண் அள்ள பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
காயலான் கடைக்கு போயிடுச்சோ?ரோட்டில் தேங்கும் மண் அள்ள, செம்மொழி மாநாடு நடந்தபோது, மூன்று வாகனங்கள் வாங்கப்பட்டன. இதுதொடர்பாக கமிஷனரிடம் கேட்ட போது, ''ஒன்று பழுது நீக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. இன்னொன்று பழுது சரி செய்ய முடியாத அளவுக்கு இருக்கிறது. மற்றொன்று எனக்கு தெரியாது,'' என்று தெரிவித்தார்.
மாநகராட்சி செலவில் வாங்கப்பட்ட வாகனத்தில், ஒன்று பயன்பாட்டில் இருக்கிறது; இன்னொன்று பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்கிறது. பழுது நீக்க பல கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். இவ்வாகனத்தை இயக்க, ஒரு நாளைக்கு, 50 லிட்டர் டீசல் நிரப்பி, இயக்க அறிவுறுத்தியுள்ளேன். நகரின் மற்ற பகுதிகளில் ரோட்டில் தேங்கும் மண்ணை அள்ள, தனியார் நிறுவனத்தினரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க திட்டமிட்டுள்ளோம்.- ஷ்ரவன்குமார்கோவை மாநகராட்சி கமிஷனர்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-201909:28:15 IST Report Abuse
நக்கல் 2010ல் மூணு வாங்கினாங்க,ஒண்ணு வேலை செய்யுது, ஒண்ணு வேலை செய்யல, மூணாவது தெரியல... ரெண்டு வாங்கிட்டு மூணுக்கு கணக்கு காட்டி இருப்பார்கள் அப்பொழுது இருந்த தீயமுக.. அப்போ நடந்த செம்மொழி மாநாட்டில் எவ்வளவு தப்பான கணக்கு காட்டப்பட்டதோ, அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.. இதில் 11 புத்தகம் அக்கா கனி எழுதியதை வேற தாத்தா அன்று வெளியிட்டார்... நம்ம குடும்பத்துக்கு நாமதான உதவணும்... ரெண்டு கழகமும் திருடர்கள்...
Rate this:
Share this comment
Cancel
raj82 - chennai,இந்தியா
04-டிச-201909:32:45 IST Report Abuse
raj82 ஒரு மணி நேரம் ஓட்ட வேண்டிய ரோட்டில 5 நிமிஷம் ஓட்ட வேண்டியாது மீதி டீசல் சேல்ஸ்... என்ஜோய்...
Rate this:
Share this comment
Cancel
04-டிச-201908:23:23 IST Report Abuse
ஸாயிப்ரியா வந்தது தெரியும் போவ(ன)து எங்கே..... அன்றே கவிஞர் தீர்க்க தரிசி எழுதியுள்ளாரே.! தன்னார்வ தொண்டு இளைஞர்கள், பொதுமக்கள் செலவே இல்லாமல் செய்ய வேண்டும் போல விபத்து நடப்பதற்குள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X