சாய்பாபா காலனியில் சாலை வசதி சகிக்கலைங்க!

Added : டிச 04, 2019
Advertisement

குழிகளால் ஆன சாலைகளால் போக்குவரத்து பாதிப்பு

டாடாபாத்தில் கால்வாய் அடைப்புடாடாபாத், அழகப்பா ரோடு சந்திப்பில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கும் சாக்கடை கால்வாயை, துார்வார வேண்டும்.- சதீஷ்குமார், டாடாபாத்.

தடாகம் ரோட்டில் மூடப்படாத குழிகள்தடாகம் ரோடு, எம்.ஜி.ஆர்., காலனியில், குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட குழிகள், பல ஆண்டுகளாக மூடப்படாமல் உள்ளது.- நாகராஜ், இடையர்பாளையம்.

63வது வார்டு மின்விபத்து அபாயம்சிங்காநல்லுார், 63வது வார்டு, அக்ரகாரம் கிழக்கு வீதி, ஆஞ்சநேயர் கோவில் அருகே கம்பத்தில் பாதுகாப்பற்ற நிலையில், மின்ஒயர்கள் உள்ளன.- ரமேஷ், சிங்காநல்லுார்.

சிவராம் நகரில் நாய் தொல்லைசுங்கம் பைபாஸ் ரோடு, சிவராம் நகர் பகுதி சாலைகளில், நாய்கள் அதிகளவில் திரிவதால், பொதுமக்கள் அச்சத்துடனே நடமாடுகின்றனர்.- சங்கவி, சிவராம்நகர்.

ராம்நகரில் சாலைக்குழிராம்நகர், ராமர் கோவில் வீதியில் சாலையில் உள்ள குழி சரிசெய்யப்படாமல், பாதுகாப்புக்காக வெறும் தார் டின் மட்டும் வைக்கப்பட்டுள்ளது.- ராமகிருஷ்ணன், ராம்நகர்.

தார் சாலை வசதியில்லைஜி.என்.மில்ஸ், எஸ்.எஸ்., கார்டன் குடியிருப்பு பகுதிக்கு, தார் சாலை அமைக்க வேண்டும்.- சதீஷ்குமார், எஸ்.எஸ்., கார்டன்.

மலுமிச்சம்பட்டியில் மின்சாரம் வீண்மலுமிச்சம்பட்டி, அண்ணாபுரம் அரசுப் பள்ளி அருகே பகலிலும் எரியும் தெருவிளக்கால், மின்சாரம் வீணாகிறது.- சுஜாதா, மலுமிச்சம்பட்டி.

சாலை படுமோசம்சரவணம்பட்டி முதல் துடியலுார் செல்லும் வழியில், சாலை பல இடங்களில் மோசமாக சேதமடைந்துள்ளது.- பலசுப்பிரமணியன், சரவணம்பட்டி.

அவிநாசி ரோட்டில் சாய்ந்த மின்கம்பம்சின்னியம்பாளையம், அவிநாசி ரோடு, கரூர் வைஸ்யா வங்கி எதிரில் உள்ள சாலையில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.- வேல்முருகன், சின்னியம்பாளையம்.

போத்தனுாரில் குழாய் உடைப்புபோத்தனுார், பாத்திமா கனி மண்டபம் எதிரே கடந்த ஒரு மாதமாக குழாய் உடைந்து, குடிநீர் வீணாகிறது.- வித்யா, போத்தனுார்.

வி.கே. மேனன் வீதியெங்கும் குழிகள்சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்.ரோடு, வி.கே.மேனன் வீதிகளில் குண்டும், குழியுமான சாலையால் போக்குவரத்து பாதிக்கிறது.- நடராஜன், கே.கே.புதுார்.

பழையூரில் குப்பைபாப்பநாயக்கன்பாளையம், 55வது வார்டு, பழையூர், கந்தசாமி லேஅவுட், தண்டபாணி வீதியில், பல வாரங்களாக குப்பை அகற்றவில்லை.- விக்னேஷ், தண்டபாணி வீதி.

ஆபத்தான நிலையில் போர்வெல்தீத்திப்பாளையம், வடக்கு பள்ளி சாலை, பிரோகோன் கன்ட்ரோல் கம்பெனி அருகில், கல் கொண்டு வெறுமனே போர்வெல் மூடப்பட்டுள்ளது.- ஜெயப்பிரகாஷ், தீத்திப்பாளையம்.

பன்றிகளால் அவதிசிங்காநல்லுார், எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி, கருணாநிதி நகரில் பன்றிகள் நடமாட்டத்தால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.- பாலன், கருணாநிதி நகர்.

காமாட்சிபுரத்தில் சேதமடைந்த ரோடுதிருச்சி ரோடு, காமாட்சிபுரம் பகுதியில் பல இடங்களில் காணப்படும் குழிகளை, உடனடியாக சரிசெய்ய வேண்டும்.- ரங்கநாதன், காமாட்சிபுரம்.

காத்திருக்கும் காய்ந்தகிளைராமநாதபுரம், 67வது வார்டு, திருச்சி பிரதான சாலையில், கரூர் வைஸ்யா வங்கி எதிரில், சாலையில் விழுந்துள்ள மரம், பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது.- செந்தில்குமார், ராமநாதபுரம்.

பாரதிநகரில் மழைநீர்குளம்குனியமுத்துார், 88வது வார்டு, பாரதிநகரில், குடியிருப்பு பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.- நிசாம்பாஷா, குனியமுத்துார்.

விநாயகபுரத்தில் சீர்செய்யப்படாத ரோடுவிளாங்குறிச்சி ரோடு, விநாயகபுரம், அன்னை வேளாங்கண்ணி நகரில் கடந்த ஆறு மாதங்களாக வலியுறுத்தியும், சேதமடைந்த சாலை சீர்செய்யப்படவில்லை.- ராஜசேகர், விநாயகபுரம்.

பள்ளி சுவரில் கட்சி போஸ்டர்குனியமுத்துார், அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் முழுவதும், கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.- சுதாகர், குனியமுத்துார்.

காளப்பட்டியில் மின்மாற்றி சேதம்காளப்பட்டி, வள்ளியம்பாளையத்தில் மின்மாற்றி மோசமாக சேதமடைந்துள்ளது.- காயத்திரி, வள்ளியம்பாளையம்.

போக்குவரத்து பாதிப்புஅவிநாசி ரோடு, சிட்ரா சிக்னல் அருகில் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் இயக்கப்படும் டாக்சி கார்களால் போக்குவரத்து பாதிக்கிறது.- விஜய், பீளமேடு.

55வது வார்டில் துார்வாராத சாக்கடைபெரியநாயக்கன்பாளையம், 55வது வார்டு, பழையூர், தண்டபாணி வீதியில் சாக்கடை கால்வாயில் குப்பை, மண் அடைத்து நிற்கிறது.- முத்துக்குமார், பழையூர்.

போக்குவரத்து நெருக்கடிசிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரேவுள்ள, காமராஜர் ரோட்டில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள், கார்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.- மணிகண்டன், சிங்காநல்லுார்

குளத்துப்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடுகோவைப்புதுார், குளத்துப்பாளையம், ஊர் கவுண்டர் தோட்டம் வீதியில், வாரத்திற்கு ஒருறை குடிநீர் வினியோகம் செய்வதால், தட்டுப்பாடு ஏற்படுகிறது.- குட்டியண்ணன், குளத்துப்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X