மருதிப்பட்டி நுாலகத்தில் இயங்கும் பள்ளி

Added : டிச 04, 2019
Advertisement
 மருதிப்பட்டி நுாலகத்தில் இயங்கும் பள்ளி

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டி அங்கன்வாடி மையத்தில் போதிய இடவசதி இல்லாததால் அருகில் உள்ள நுாலக கட்டடத்தில் பள்ளி இயங்குகிறது.

மருதிப்பட்டி அங்கன்வாடி மையத்தில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி., வகுப்பு தொடங்கப்பட்டு தற்போது 21 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு தனியாக கட்டட வசதி இல்லாததால் அங்கன்வாடி மையத்தில் தான் வகுப்புகள் இயங்கியது.

சிறிய கட்டடம் என்பதால் நெருக்கடியில் மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது பெய்து வரும் மழையில் கட்ட டத்தின் உள்ளே தண்ணீர் வடிகிறது. இதனால் அருகில் உள்ள நுாலக கட்டடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் நிலை நிலவுகிறது.சேதமடைந்த கட்டடத்தில் தான் அங்கன்வாடி குழந்தைகள் உள்ளனர். கட்டடம் இடிந்தால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X