பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் தூய்மை விருது: கோவை கல்லூரிக்கு முதலிடம் 

Added : டிச 04, 2019
Advertisement

கோவை:மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், கோவையை சேர்ந்த கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரிக்கு, துாய்மை விருது வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் தகுதியான கல்விநிறுவனங்களுக்கு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்த விருது, கல்லுாரி வளாகத்தின் பல்வேறு துாய்மை அம்சங்களை, ஆய்வு செய்து வழங்கப்படுகிறது.இதன்படி, தேசிய அளவில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதலிடத்தை பெற்றுள்ளது. 2018ம் ஆண்டு இதே பிரிவில், இக்கல்லுாரி நான்காம் இடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையேயான பிரிவில், கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி இரண்டாம் இடம், பசுமை பராமரிப்புக்கு இரண்டாம் இடம், 'ஒரு மாணவன்; ஒரு மரம்' திட்டத்தில் மூன்றாம் இடம் உட்பட, தேசிய அளவில் மூன்று விருதுகளை அள்ளியுள்ளது.டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கல்விக்குழும அறங்காவலர் மலர்விழி விருதுகளை பெற்றுக்கொண்டார். கிருஷ்ணா கல்லுாரி முதல்வர்கள் பேபி ஷகிலா,ஜேனட் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X