கோவை:'தினமலர்' மாணவர் பதிப்பான, பட்டம் இதழ் சார்பில் நடந்து வரும், மெகா வினாடி வினா போட்டிக்கான காலிறுதி சுற்று, கோவை பள்ளிகளில் களைகட்டி வருகிறது.'தினமலர்', கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்.,கல்வி நிறுவனங்கள் இணைந்து, நடத்தும் இந்த மெகா வினாடி வினா போட்டி, நேற்று சூலுாரில் உள்ள ஆர்.வி.எஸ்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், மொத்தம் 240 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் முன்னிலையில், காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது. இதில், 'ஹெச்' அணியைச் சேர்ந்த ஆதிஷா, அபிநயா ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பள்ளியின் முதல்வர் குஞ்சுமோன் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார்.நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் பாக்கியலட்சுமி, ஆசிரியைகள் சுமதி, மரியகிறிஸ்டி, மீனாட்சி, செல்வமாலா பிரவீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.