தமிழ்நாடு

தாங்க முடியல! சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் : பராமரிப்பில்லாத கழிப்பறைகளால்

Added : டிச 04, 2019
Advertisement
தாங்க முடியல! சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் : பராமரிப்பில்லாத கழிப்பறைகளால்

சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பராமரிப்பு இல்லாத கழிப்பறைகளால் அங்கு பணிபுரியும் ஊழியர்களும், பொது மக்களும் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் உதயமானபோது இம்மாவட்டத்துக்காக கலெக்டர் அலுவலக வளாகம் கட்டப்பட்டது.கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்து முக்கிய துறை அலுவலகங்களும் இவ்வளாகத்திலேயே இயங்குகிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறைகள் உள்ளன. அங்கு பணிபுரியும் ஊழியர்களும், அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொது மக்களும் இக்கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர்.

கலெக்டர் அலுவலக அறை முன்பாக உள்ள கழிப்பறை உள்ளிட்ட ஓரிரு கழிப்பறைகள் மட்டுமே முறையாக பராமரிக்கப்பட்டு துாய்மையாக இருக்கிறது. மற்ற கழிப்பறைகள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இக்கழிப்பறைகள் முன்பாக நடைபாதையிலேயே கழிவுநீர் தேங்கிக்கிடப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதை எந்த அதிகாரிகளும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

மாறாக நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகளும் அந்த இடத்தில் மூக்கை பிடித்துக்கொண்டு தான் செல்கிறார்கள். ஒரு சில கழிப்பறைகள் தடுப்புச்சுவர் இல்லாமல் ஆபத்தான முறையிலும் உள்ளது. இந்த அலுவலகங்களுக்குள் நுழைபவர்களை, கழிப்பறை துர்நாற்றமே முதலில் வரவேற்கிறது அதற்கு பிறகே அலுவலர்கள் வரவேற்கிறார்கள்.

இக்கழிப்பறைகளை பயன்படுத்துபவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள், அலுவலர்கள் பணிபுரியும் இடத்திலேயே சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.எனவே இவ்வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் கழிப்பறைகளை முறையாக பராமரித்து, சுகாதாரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதே நேரம் உயரதிகாரிகள் காரில் இருந்து இறங்கி நேராக தங்களது அறைக்கு மட்டுமே சென்று பணிகளை கவனிக்காமல் அவ்வப்போது அனைத்து துறை அலுவலகங்களுக்கும் ஒரு விசிட் அடித்தால் தான் இது போன்ற பிரச்னைகளை சீர் செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X