பொது செய்தி

தமிழ்நாடு

திறந்தவெளி கிணறுகளை மூட பள்ளிகளுக்கு உத்தரவு

Added : டிச 04, 2019
Advertisement

சிவகங்கை:பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகளை மூடி வைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்திஉள்ளது.

பள்ளி சுற்றுச்சுவர் அருகே மாணவர்கள் செல்லக்கூடாது. மழையால் சேதமான வகுப்பறைகளை பயன்படுத்தக்கூடாது. மின்கசிவு இருந்தால், மின் இணைப்பை துண்டிக்கவும். வளாகத்தில் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டியை மூடி வைக்கவும். விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஏரி, குளம், ஆறுகளில் குளிப்பதையும், ஆற்றை கடந்து பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும். இடி, மின்னல் ஏற்படும் போது மரத்திற்கு அடியில் ஒதுங்க கூடாது. பள்ளிக்குள் சேதமான மரங்களை அகற்ற வேண்டும்.

பள்ளி மேற்கூரைகள் உறுதியாக உள்ளதா என பார்ப்பதோடு, அதில் மழை நீர் தேங்காத வகையில் கவனிக்கவும். பருவ கால மாற்றத்தால் மாணவர்களுக்கு டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல் பரவாமல் இருக்க செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தை எந்நேரமும் மழை, கழிவு நீர் தேங்காத வகையில் சுத்தமாக வைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X