பொது செய்தி

தமிழ்நாடு

'யோநோ' பைக் ரேலிக்கு எஸ்.பி.ஐ., வரவேற்பு

Added : டிச 04, 2019
Advertisement

கோவை:எஸ்.பி.ஐ., வங்கியின் யோநோ விழிப்புணர்வு பைக் ரேலிக்கு, கோவை மண்டல அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.எஸ்.பி.ஐ., வங்கியின், இந்தியா யோநோ ஆப், கடந்த 2017, நவ.,24ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் இரண்டாமாண்டு நிறைவையொட்டி, யோநோ பைக் ரேலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது.இதில், எஸ்.பி.ஐ., சென்னை சர்க்கிள் தலைமை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் சுரேஷ், ஸ்ரீனிவாசன், முகுந்தன் ஆகியோர் தமிழகம் முழுவதும், ஆயிரத்து 600 கி.மீ., பயணத்தை மேற்கொள்கின்றனர். பயணம் முழுவதும் யோநோ ஆப் பயன்பாடுகள் மற்றும் வங்கிக் கிளைக்கு செல்லாமலேயே தனிநபர் கடன் பெறும் முறைகள், குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.கோவை எஸ்.பி.ஐ., மண்டல அலுவலகத்திற்கு வந்த இவர்களுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மண்டல துணை பொதுமேலாளர் சத்யபிரகாஷ், பிராந்திய மேலாளர்கள் ஜோசப் கிறிஸ்டி, பாலசுப்பிரமணியன் உட்பட, 50க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X