ஏறுமுகத்தில் வெங்காயம் 'ஆம்லேட்' விலை உயர்வு

Added : டிச 04, 2019
Advertisement
 ஏறுமுகத்தில் வெங்காயம்   'ஆம்லேட்' விலை உயர்வு

சிவகங்கை:வெங்காயம் விலை ஏற்றத்தால் சிவகங்கை ஓட்டல்களில் 'ஆம்லேட்' ஒன்றின் விலை 15 ல் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. முட்டை பொரியல், முட்டை மற்றும் ப்ரைடு ரைஸ்களில் வெங்காயத்திற்கு மாற்றாக முட்டை கோஸ் துாவுகின்றனர்.

சிவகங்கை மாவட்ட அளவில் உள்ள காய்கறி மார்க்கெட்களில் தரத்தை பொறுத்து பல்லாரி கிலோ 120 ல் இருந்து 170 வரை விற்கிறது. சாம்பார் வெங்காய விலையும் 80ல் இருந்து 120 ஆக உயர்ந்து விட்டது.இதனால், அசைவ பிரியர்கள் ஓட்டல்களில் புரோட்டோவுடன், வெங்காயம் துாக்கலாக' ஆம்லெட் கேட்கவே தயங்குகின்றனர். அந்தளவிற்கு வெங்காய விலை உயர்வால் ஓட்டல்களில் 'ஆம்லேட்' விலையும் 15ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்திவிட்டனர்.

வெங்காயம் அதிகம் பயன்படுத்தும் உணவு பொருட்களான முட்டை பொரியல், 'எக் ரைஸ்', 'ப்ரைட் ரைஸ்' களில் வெங்காயத்திற்கு ஈடாக நைசாக துருவிய 'முட்டை கோஸ்' துாவுகின்றனர். குறிப்பாக சிறு சிறு டீக்கடைகளில் மாலை நேர பலகாரமாக விற்கப்படும் 'வெங்காய போண்டா'விற்கும் தடை விதித்துள்ளனர். மாறாக வாழைக்காய், உருளை, அப்பள பஜ்ஜி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அசைவ ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: கார்த்திகை மாதமாக இருப்பதால், அசைவ பிரியர்களின் வருகை அசைவ ஓட்டல்களுக்கு குறைந்து விட்டது. இருப்பினும் வழக்கமான வாடிக்கையாளர்கள் அதிக வெங்காயம் போட்டு ஆம்லேட் கேட்கின்றனர். விலை ஏற்றத்தால் தவிர்க்க முடியாமல் விலையை உயர்த்தியுள்ளோம். ஆம்லெட் தவிர்த்து மற்ற உணவு பொருட்களில் வெங்காயம் குறைந்து விட்டது. டாஸ்மாக் பார்களில் 'ஆம்லெட்' விலை ரூ.25 வரை விற்கின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X