காரைக்குடி சப்வே-யில்'வாட்டர் வாஷ்'

Added : டிச 04, 2019
Advertisement
  காரைக்குடி சப்வே-யில்'வாட்டர் வாஷ்'

காரைக்குடி:காரைக்குடி ரயில்நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரில், வாகன ஓட்டிகள், வாகனங்களை கழுவுகின்றனர்.

காரைக்குடி ரயில்நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை வழியாகலட்சுமிநகர், புதுவயல் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு செல்லலாம். ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.இந்த சுரங்கப்பாதையில், கடந்த சில வாரங்களாக பெய்துவரும் மழையால், தண்ணீர் நிரம்பியுள்ளது. அவ்வப்போது, பம்ப் செட் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஆனாலும், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், 5 நாட்களுக்கும் மேலாக மழைநீர் நிரம்பி கிடக்கிறது.

வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சுற்றி வரவேண்டியிருக்கிறது. தவிர, நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள்தங்களது வாகனங்களை பகுதியாக மாற்றிவருகின்றனர். காரைக்குடி, கல்லல் உட்பட பல பகுதிகளில் பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுரங்கப் பாதை பயன்பாடின்றி தண்ணீரில்மூழ்கி கிடக்கிப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X