சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு இடிந்து 4 பேர் காயம்

Added : டிச 04, 2019
Advertisement
 வீடு இடிந்து 4 பேர் காயம்

சிவகங்கை:சிவகங்கை உடையார் சேர்வை ஊரணி மேற்கு கரையில் வீடு இடிந்ததில் பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் காயமுற்றனர்.

சிவகங்கையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு 12:00 மணியில் இருந்து விடியும் வரை மழை பெய்தது. இந்த மழைக்கு உடையார் சேர்வை ஊரணி மேற்கு கரையில் இருந்த ராஜேந்திரன் 56, ஓட்டு வீட்டின் பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த ராஜேந்திரன், அவரது மனைவி வள்ளி 48, 7 மாத குழந்தை நித்யஸ்ரீ, இவரது வீட்டிற்கு வந்த மலைச்சாமி மனைவி முத்துலட்சுமி 40, ஆகிய 4 பேருக்கும் காயம் ஏற்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிந்த வீட்டை கோட்டாட்சியர் செல்வகுமாரி, தாசில்தார் மைலாவதி பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X