பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1,000 கோடி இலக்கை அடைந்தது 'ரெப்கோ'

Added : டிச 04, 2019
Advertisement

கோவை:ரெப்கோ வங்கியால் உருவாக்கப்பட்ட ரெப்கோ நுண்கடன் நிறுவனம் தமிழகம், புதுச்சேரியில், 90 கிளைகளை கொண்டுள்ளது. இதன்கீழ் உள்ள, 60 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம், 12 லட்சம் உறுப்பினர்களுக்கு இதுவரை, 4,000 கோடி ரூபாய் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இஸபெல்லா பொறுப்பேற்ற பிறகு, ரூ.300 கோடி வர்த்தகமாக இருந்த இந்நிறுவனம், தற்போது, ரூ.1,000 கோடியை அடைந்து, சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில், 1,300 கோடி ரூபாய் இலக்குடன் மற்ற மாநிலங்களில் நுண்கடன் திட்டத்தை, விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.நுண்கடன் இணைப்பு வழங்கியமைக்காக, நபார்டு நிறுவனத்தின் விருதுகளை மூன்று ஆண்டுகளாகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் விருதினை ஐந்து முறையும், கடந்த ஆண்டு அகில இந்திய அளவில், ஸ்காட்ச் விருதினையும் இந்நிறுவனம் பெற்றுள்ளதாக, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X