பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தின ஓவிய போட்டி

Added : டிச 04, 2019
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் குழந்தைகள் தின விழா ஓவிய போட்டி நடந்தது.தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாஸ்தா சுந்தரம் முன்னிலை வகித்தார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராமசந்திரன் வரவேற்றார். இயற்கை காட்சி என்ற தலைப்பில் நடந்த ஓவிய போட்டியில் முதல் பரிசு 4ம் வகுப்பு ஜி.நிஷாந்த், 2ம் பரிசு பி.கோடீஸ்வரன், 3ம் பரிசு கே.கவியரசு பெற்றனர்.'மாணவர்களும் ஏவுகணை' என்ற தலைப்பில் நடந்த ஓவிய போட்டியில் முதல் பரிசு 10ம் வகுப்பு பி.தீபிகா, 2ம் பரிசு 8 ம்வகுப்பு கே. சரண்யா, மூன்றாம் பரிசு 9ம் வகுப்பு மோகனா பெற்றனர்.

மாணவிகள் யோகிதா, சிவஸ்ரீ ஆறுதல் பரிசு பெற்றனர். துளிர் இல்ல மாணவர்களுக்கு 'டெலஸ்கோப் பயிற்சியாளர்' சரவணபாண்டி கர்ணமோட்சம், பரிசு, சார்லிசாப்ளின் குறும்படங்களை காண்பித்தார். கல்பனா சாவ்லா துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் ஆண்டாள் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X