பொது செய்தி

தமிழ்நாடு

அடிக்கடி விபத்துக்கு காரணம் என்ன? ஆய்வில் கிடைத்தது விடை

Added : டிச 04, 2019
Advertisement

அவிநாசி:அவிநாசியின் பிரதான ரோடுகளில், அடிக்கடி விபத்து நேரிடுகிறது; இதற்கு, தெரு விளக்கு இல்லாததால், அந்த ரோடு இருளில் மூழ்குவதும் ஒரு காரணம் என, போக்குவரத்து போலீசார் கள ஆய்வில் கண்டறிந்தனர்.அந்த அடிப்படையில், 'அவிநாசி கைகாட்டிபுதுார் ரவுண்டானா, பழைய பஸ் ஸ்டாண்ட், சூளை, தாலுகா அலுவலகம், சேவூர் ரோடு மடத்துபாளையம் பிரிவு, காந்திபுரம், மேற்குரத வீதி உள்ளிட்ட இடங்களில், 'ஹைமாஸ்' விளக்கு பொருத்த வேண்டும்' என, கலெக்டர் தலைமையில் நடக்கும் சாலை பாதுகாப்பு கூட்டத்தில், கருத்துரு முன்வைக்கப்பட்டது.இதை, மாவட்ட நிர்வாகம் ஏற்று, விளக்கு கம்பம் பொருத்த அனுமதியளித்தது; ஆனால், அதற்கான நிதி இல்லை. இருப்பினும், அவசர அவசியம் கருதி, அவிநாசி பேரூராட்சி பொதுநிதியில் இருந்து, தலா, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், 9 மீ., உயரம் கொண்ட, இரண்டு சோலார் எல்.இ.டி., 'ஹைமாஸ்' விளக்கு பொருத்தப்பட உள்ளது.முதற்கட்டமாக, மடத்துப்பாளையம் பண்ணாரியம்மன் கோவில் சந்திப்பு ரோடு, அவிநாசி கால்நடை மருத்துவமனை ரோடு சந்திப்பு என, இரு இடங்களில் விளக்கு பொருத்தப்பட உள்ளன. பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர், அதற்கான கள ஆய்வு மேற்கொண்டு, இடத்தை தேர்வு செய்தனர்.எஞ்சிய, ஏழு இடங்களில் 'ஹைமாஸ்' விளக்கு பொருத்த, நிதியில்லாததால், எம்.பி., தொகுதி நிதி மற்றும் சாலை பாதுகாப்பு திட்ட நிதியில் இருந்து, தலா, 3 விளக்கு கம்பம், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒரு விளக்கு அமைக்க நிதி கேட்டு, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.நிதி கிடைக்கும் பட்சத்தில், அவிநாசியின் பிரதான ரோடு மற்றும் வீதி, இரவிலும் ஜொலிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X