திருப்பூர்:திருப்பூர் ரயில் நிலைய முதல் பிளாட்பார்மில் இருந்து இரண்டாவது பிளாட்பார்ம் செல்ல, லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள், 24 மணி நேரமும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு பிளாட்பார்ம் மார்க்கத்தில் உள்ள லிப்ட் மட்டும் வேலை செய்கிறது. முதல் பிளாட்பார்ம் பழுதாகியுள்ளது. பயணிகள் பலமுறை பட்டனை அழுத்தினால், 'அவுட் ஆப் சர்வீஸ்' என ஆங்கிலத்தில் ஒளிக்கிறது. இதனால், பயணிகள் படியேறி பிளாட்பார்ம்மை கடக்கின்றனர்.லிப்ட் கண்காணிப்புக்கு நான்கு பேர் கொண்ட குழுவை ரயில்வே நியமித்துள்ளது. சீரான இடைவெளியில், சுழற்சி முறையில் இவர்கள் பணியாற்றுகின்றனர்.
லிப்ட்டில் சிக்கிக்கொண்டால், அவர்களை மீட்க இவர்களின் அழைப்பு எண்கள் எழுதி ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், லிப்ட் பழுதாகி செயலிழந்து கிடப்பதை இக்குழுவினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.பயணிகள் கூறுகையில், 'முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளை அழைத்து வருபவர்கள், பெரிய பாலத்தின், 35 படிக்கட்டுகளை ஏறி கடக்க சிரமப்படுகின்றனர். லிப்ட் பழுதை தாமதமின்றி உட னடியாக சரிசெய்ய வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE