தண்ணீரில் தத்தளிக்கும் சீனியப்பா நகர்

Added : டிச 04, 2019
Share
Advertisement
மானாமதுரை:மானாமதுரை சீனியப்பா நகரில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.மானாமதுரையில் மதுரை-ராமேஸ்வரம் ரோட்டை ஒட்டி விரிவாக்கப் பகுதியான சீனியப்பா நகரில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.தற்போது கடந்த ஒரு வாரமாக மானாமதுரை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் இந்த பகுதியில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி
 தண்ணீரில் தத்தளிக்கும் சீனியப்பா நகர்

மானாமதுரை:மானாமதுரை சீனியப்பா நகரில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

மானாமதுரையில் மதுரை-ராமேஸ்வரம் ரோட்டை ஒட்டி விரிவாக்கப் பகுதியான சீனியப்பா நகரில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.தற்போது கடந்த ஒரு வாரமாக மானாமதுரை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் இந்த பகுதியில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன,மேலும் பஸ் ஸ்டாப்பில் இருந்து வரும் ரோடு குண்டும்,குழியுமாக இருப்பதினால் வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அந்த பகுதியிலிருந்து மெயின் ரோட்டிற்கு வருவதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,இந்த பகுதியில் ஊராட்சி அமைப்பிலிருந்து மின்விளக்கு மற்றும் ரோடு வசதி இது வரை செய்து தரவில்லை,மழை காலங்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி தீவு போல மாறி விடுகிறது.

இங்கிருந்து அத்தி யாவசிய பொருட்கள் வாங்க கூட செல்ல முடியாமல் தத்தளித்து வருவதாகவும், இந்த பகுதியில் உள்ள குறைகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X