பொது செய்தி

தமிழ்நாடு

எங்கெங்கு எப்போது ஓட்டுப்பதிவு: மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்

Added : டிச 04, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், முதல்கட்டமாக, ஏழு ஊராட்சி ஒன்றியம், இரண்டாம் கட்டமாக, ஆறு ஒன்றியங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தில், 265 ஊராட்சி தலைவர், 2,295 ஊராட்சி வார்டு உறுப்பினர், 170 ஒன்றிய கவுன்சிலர், 17 மாவட்ட கவுன்சிலர் என, மொத்தம், 2,747 பதவிகள் உள்ளன.இதில்,''784 ஓட்டுச்சாவடிகளில், 1,250 பதவிகளுக்கு, 27ம் தேதியும், 902 ஓட்டுச்சாவடிகளில், 1,497 பதவிகளுக்கு, 30ம் தேதியும் தேர்தல் நடத்தப்படும்'' என, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி விஜயகார்த்திகேயன் கூறினார்.முதற்கட்ட தேர்தல் திருப்பூர் ஒன்றியத்தில், 8 ஒன்றிய வார்டு, 13 ஊராட்சி மற்றும், 114 ஊராட்சி வார்டுகள். ஊாத்துக்குளி ஒன்றியத்தில், 12 ஒன்றிய வார்டு, 37 ஊராட்சி, 261 ஊராட்சி வார்டு. காங்கயம் ஒன்றியத்தில் 11 ஒன்றிய வார்டு, 15 ஊராட்சி மற்றும் 138 வார்டுகள்.பல்லடம் ஒன்றியத்தில், 13 ஒன்றிய வார்டு, 20 ஊராட்சி மற்றும் 189 வார்டுகள். வெள்ளகோவிலில் ஒன்றியத்தில், ஒன்பது வார்டு, ஒன்பது ஊராட்சி, 90 ஊராட்சி வார்டுகள்.மூலனுார் ஒன்றியத்தில், 10 வார்டு, 12 ஊராட்சி, 111 ஊராட்சி வார்டு. தாராபுரம் ஒன்றியத்தில், 12 வார்டு, 16 ஊராட்சி மற்றும், 141 ஊராட்சி வார்டு.இரண்டாம் கட்ட தேர்தல்அவிநாசி ஒன்றியத்தில், 19 ஒன்றிய வார்டு, 31 ஊராட்சி, 270 ஊராட்சி வார்டு. பொங்கலுாரில், 13 ஒன்றிய வார்டு, 16 ஊராட்சி, 156 ஊராட்சி வார்டு. குண்டடத்தில், 15 ஒன்றிய வார்டு, 24 ஊராட்சி, 186 வார்டு.குடிமங்கலத்தில், 13 ஒன்றிய வார்டு, 23 ஊராட்சிகள் மற்றும், 201 ஊராட்சி வார்டு. உடுமலையில், 26 ஒன்றிய வார்டு, 38 ஊராட்சி, 333 ஊராட்சி வார்டு. மடத்துக்குளத்தில், 9 ஒன்றிய வார்டு, 11 ஊராட்சி, 105 ஊராட்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X