அண்ணனை கொலை செய்த தம்பி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அண்ணனை கொலை செய்த தம்பி

Added : டிச 04, 2019

இளையான்குடி: இளையான்குடி அருகே அண்ணன், தம்பிக்கிடையே ஏற்பட்ட தகராறில் தம்பி வெட்டியதில் அண்ணன் பலியானார்.

இளையான்குடி அருகே உள்ள துகவூரைச் சேர்ந்த காக்கையன் மகன்கள் கருப்பையா70, மலைக்கண்னு ,60 இவர்களுக்கு சொந்தமான நிலத்தை கருப்பையா பயிர்காப்பீடு செய்துள்ளார், இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.மலைக்கண்ணு மண் வெட்டியால் கருப்பையாவை கடந்த மாதம் 17 ந் தேதி வெட்டியதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பையா பலியானார்.இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மலைக்கண்ணுவை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X