தமிழ்நாடு

திருப்பூர் தொழில் முன்னேற்றத்திற்கு 'சிக்கல்' இல்லை! நுால் விலை குறைப்பால் மகிழ்ச்சி

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019
Advertisement
திருப்பூர் தொழில் முன்னேற்றத்திற்கு 'சிக்கல்' இல்லை! நுால் விலை குறைப்பால் மகிழ்ச்சி

திருப்பூர்:திருப்பூரில் உள்ள பெரிய நுாற்பாலைகள் மட்டும், ஒசைரி நுால் விலையை கிலோவுக்கு, 5 ரூபாய் குறைத்துள்ளன.கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை என, மாநிலத்தின் பல மாவட்டங்களில் நுாற்பாலைகள் இயங்குகின்றன.
இவை, வெளிமாநிலங்களில் இருந்து, பருத்தி பஞ்சு கொள்முதல் செய்து, நெசவு, பின்னலாடை உற்பத்திக்கான நுால் ரகங்களை தயாரித்து, உள்நாட்டு, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. பஞ்சு விலை மற்றும் வர்த்தக நிலவரம் கணக்கிட்டு, நுாற்பாலைகள், நுால் விலையை சீரமைக்கின்றன. திருப்பூரில் உள்ள இரண்டு பெரிய நுாற்பாலைகளின் நிலைப்பாட்டை பொருத்தே, பிற நுாற்பாலைகள் நுால் விலையை நிர்ணயிக்கின்றன.
கடந்த அக்டோபரில், பருத்தி சீசன் துவங்கியது; கடந்த மாதம் துவங்கி, வெளிமாநிலங்களிலிருந்து, தமிழக நுாற்பாலைகளுக்கு புதிய பஞ்சு கிடைத்து வருகிறது. சீசன் துவங்கியதால், ஒரு கேண்டி (355.62 கிலோ) பஞ்சின் கொள்முதல் விலை, 40 ஆயிரத்து 500 ரூபாயாக குறைந்துள்ளது.
அதே நேரம், ஆடை உற்பத்தி துறையில் மந்த நிலை மாறிவருகிறது. உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கான 'ஆர்டர்' அதிகரிக்க துவங்கியிருக்கிறது. இதனால், உள்நாட்டு, ஏற்றுமதி நுால் வர்த்தகம் உத்வேகம் பெற்றுள்ளது.
இந்நிலையில், திருப்பூரில் உள்ள பெரிய நுாற்பாலைகள், பின்னலாடை தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் ஒசைரி நுால் விலையை, கிலோவுக்கு 5 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளன. அதன்படி, 24ம் நம்பர் கோம்டு ரகம், 194 ரூபாய், 30ம் நம்பர் நுால், 205 ரூபாய், 34ம் நம்பர், 219, 40ம் நம்பர், 226 ரூபாயாக உள்ளது. செமி கோம்டு ரகத்தில், 24ம் நம்பர் நுால், கிலோ 184 ரூபாய், 30ம் நம்பர் கிலோ, 195, 34ம் நம்பர், 209, 40ம் நம்பர் நுால், 216 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுாற்பாலை துறையினர் கூறியதாவது;வழக்கமாக, பெரிய நுாற்பாலைகள், நுால் விலையை குறைக்க மாட்டார்கள்; சிறிய நுாற்பாலைகள் தான், விலையில் தள்ளுபடி வழங்குவர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், பெரிய நுாற்பாலைகள், கிலோவுக்கு, 5 ரூபாய் விலை குறைத்து அறிவித்துள்ளன.
இதனால், சிறிய நுாற்பாலைகளும் விலை குறைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது,'' என்றனர்.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ள நிலையில், பெரிய நுாற்பாலைகளின் அதிரடி ஒசைரி நுால் விலை குறைப்பு அறிவிப்பு, திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X