பொது செய்தி

தமிழ்நாடு

உணவில் சேர்க்கும் கலர்பொடி நோயை ஏற்படுத்தும் உணவு பாதுகாப்புத்துறை டாக்டர் சோமசுந்தரம் எச்சரிக்கை

Added : டிச 04, 2019
Advertisement

திருப்பரங்குன்றம் ''உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் கலர் பொடிகளால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன'' என மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சோமசுந்தரம் தெரிவித்தார்.மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் மண்டல உணவு பாதுகாப்பு குழுக் கூட்டம் நடந்தது. கல்லுாரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். டாக்டர் சோமசுந்தரம் பேசியாதவது: அனைத்து வணிகர்களும் வணிக சட்டங்களை தெரிந்து கொள்வதும், லைசென்ஸ் பெறுவதும் கட்டாயம். சட்டம் வணிகர்களை பாதுகாக்கதானே தவிர நசுக்க அல்ல. தெரிந்தே தவறு செய்பவர்களை தண்டிக்கவே சட்டம் உள்ளது.5 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற்றால் பல ஆயிரம் ரூபாய் மிச்சமாகும். அவரவர் செய்யும் வணிகத்திற்கான லைசென்ஸ் எடுக்க வேண்டும். லைசென்ஸ் பெற்றால் மானியத்துடன் அரசு கடன் வழங்குகிறது. லைசென்ஸ் பெற தவறான வழிகாட்டிகளை நம்பாதீர்கள்.மதுரையில் 12 ஆயிரம் வணிகர்களிடம் உரிய லைசென்ஸ் இல்லை. 1400 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பாக்கெட்டில்தான் எண்ணெய் விற்க வேண்டும். டிரம்களில் விற்கக்கூடாது. உணவு பொருட்களை கலர் பொடிகளை சேர்க்கக்கூடாது.உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் ஒவ்வொரு கலர் பொடியும் ஒவ்வொரு நோயை மனிதர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது. கலர் பொடிகள் இன்றி தயாரிக்க வேண்டும். அஜினோமோட்டாவை பயன்படுத்தவே கூடாது.மக்களும் கலர் பொடி உணவுகளை தவிர்க்க வேண்டும். மளிகை பொருட்களில் பெரும் பாலும் கலப்படம் உள்ளது. இறைச்சி கடைகளில் சில்வர் கொக்கிகளே பயன் படுத்த வேண்டும். கலாவதியான பொருட்களை விற்றால் கடும் தண்டனை கிடைக்கும், என்றார்.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜ்குமார், சிவச்சந்திரன், வணிகர்கள் கலந்து கொண்டனர். பயன்படுத்த வேண்டிய, பயன்படுத்தக்கூடாத உணவு பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X