பொது செய்தி

தமிழ்நாடு

காளை சந்தை களை இழந்தது

Added : டிச 04, 2019
Share
Advertisement
திருப்பூர்:சந்தையில், விற்பனைக்காக கணிசமான அளவு மாடு, காளைகள் கொண்டு வரப்பட்ட போதும், விற்பனை மந்தமாகவே இருந்தது.தென்னம்பாளையத்தில், நேற்று முன்தினம், கால்நடை சந்தை நடந்தது. ஈரோடு, கோவை, பெருந்துறை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து பசு, காளை, எருமைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விற்பனைக்கு, சிறிய ரக மாடுகளை விட, பெரிய ரக காளைகளே அதிகளவில் இருந்தன. கேரள

திருப்பூர்:சந்தையில், விற்பனைக்காக கணிசமான அளவு மாடு, காளைகள் கொண்டு வரப்பட்ட போதும், விற்பனை மந்தமாகவே இருந்தது.தென்னம்பாளையத்தில், நேற்று முன்தினம், கால்நடை சந்தை நடந்தது. ஈரோடு, கோவை, பெருந்துறை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து பசு, காளை, எருமைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விற்பனைக்கு, சிறிய ரக மாடுகளை விட, பெரிய ரக காளைகளே அதிகளவில் இருந்தன. கேரள வியாபாரிகள், இறைச்சிக்காக, காளைகளை வாங்கி சென்றனர்.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், 100 மாடுகள் குறைவாக வந்தது; தேவை குறைவு என்பதால், வியாபாரம் மந்தமாகவே இருந்தது. ஏலத்தில், தரமான மாடு, 26 ஆயிரம் முதல், 38 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. காளைகள், 40 ஆயிரம் முதல் விற்கப்பட்டன. கன்றுகுட்டி, 2,800 முதல், 3,900 ரூபாய் வரை விற்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X