பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்ட பகுதிகளில் உள்ளாட்சித்தேர்தல் நடக்கும் தேதி

Added : டிச 04, 2019
Advertisement

சிவகங்கை:தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிச.27 மற்றும் டிச. 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு எந்த தேதியில் தேர்தல் நடக்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட தேர்தல் (டிச.27) நடக்கும் பகுதிகள்: காளையார்கோவில், சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை,இளையான்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகள், ஊராட்சி வார்டுகள்,ஒன்றிய கவுன்சில் வார்டுகள், மாவட்ட ஊராட்சி கவுன்சில் வார்டுகள்.

இரண்டாம் கட்ட தேர்தல் (டிச.30) நடக்கும் பகுதிகள்: எஸ்.புதுார்,சிங்கம்புணரி,திருப்புத்துார், கல்லல், சாக்கோட்டை, கண்ணங்குடி, தேவகோட்டை ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகள், ஊராட்சி வார்டுகள், ஒன்றிய கவுன்சில் வார்டுகள், மாவட்ட ஊராட்சி கவுன்சில் வார்டுகள்.இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X