திருப்பூர்:'திருப்பூரில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மின் பிரிவு அலுவலகத்தில், மின் நுகர்வோர் தங்கள் புதிய இணைப்பு எண்களை அறிந்து கொள்ள வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன் அறிக்கை:திருப்பூர் மின் கோட்டம், செட்டிபாளையம் பிரிவுக்கு (எண், 215) உட்பட்ட பலவஞ்சிபாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, திருவள்ளுவர் நகர் ( பிரிவு எண், 273) அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, பலவஞ்சிபாளையம் மற்றும் அய்யம்பாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் நுகர்வோர், தங்கள் புதிய மின் இணைப்பு எண் விவரங்களை, திருவள்ளுவர் நகர் பிரிவு அலுவலகத்தை, 94458 51407 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.