சிங்கம்புணரி: சிங்கம்புணரி சுந்தரம் நகரில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி பலியானார். சிங்கம்புணரி அருகே கோபாலபச்சேரியை சேர்ந்த செல்லையா மகன் சண்முகம்,62 கட்டட தொழிலாளி. இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகள் உள்ளது.
இவர் நேற்று காலை சுந்தரம் நகரில் வீட்டின் வெளிப்புற சுவர் பூச்சு வேலைக்காக சாரம் கட்டும் பணி செய்தார். சுவரை ஒட்டி சென்ற உயர் மின்னழுத்த கம்பி மீது மரக்கட்டை உரசியது. மழை பெய்ததால் மரக்கட்டையில் மின்சாரம் தாக்கியதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சிங்கம்புணரி போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.