திருப்பூர்:எஸ்.கே.எல்., பள்ளி அறிவியல் கண்காட்சியில், மாணவர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.அவிநாசி அருகேயுள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் பங்கேற்று நடத்திய அறிவியல் கண்காட்சி நடந்தது. மறைந்த ஜனாதிபதி, அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பள்ளி நிர்வாக இயக்குநர் கோவிந்தசாமி, பள்ளி தாளாளர் ராதாமணி, செயலாளர் மிதுன் முன்னிலை வகித்தனர்.கண்காட்சியில் திருப்பூர், அவிநாசி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புளை காட்சிப்படுத்தினர். சிறந்த படைப்புகள் தேர்வு செய்து, பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.