தமிழ்நாடு

தினமலர் - பட்டம் மெகா வினாடி வினா போட்டி விரகனூர் வேலம்மாள் - பரவை கற்பகம் அண்ணாநகர் கந்தசாமி கொத்தனார் பள்ளி மாணவர்கள் ஆரவாரம்

Added : டிச 04, 2019
Advertisement

மதுரை, :தினமலர் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்ற மெகா வினாடி வினா போட்டியில் மதுரை விரகனுார் வேலம்மாள் மெட்ரிக், பரவை கற்பகம் மெட்ரிக் மற்றும் அண்ணாநகர் கந்தசாமி கொத்தனார் உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.மாணவர் எதிர்காலம் கருதி தினமலர் நாளிதழ் 'பட்டம்' எனும் மாணவர் பதிப்பை வெளியிடுகிறது. பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளி அளவிலும், மாவட்ட மற்றும் மண்டல அளவிலும் தினமலர் பட்டம் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் சார்பில் இந்த வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன.பள்ளிதோறும் நடக்கும் இப்போட்டியின் தொடர்ச்சியாக இந்த மூன்று பள்ளிகளிலும் நடந்த முதல்நிலை தேர்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது. அதிக மதிப்பெண் அடிப் படையில் ஒவ்வொரு பள்ளியிலும் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.வேலம்மாள் மெட்ரிக்இப்பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட எட்டு குழுக்களுக்கு ஆசிரியர் சரத்ராம் வினாடி வினா போட்டியை நடத்தினார். அதிக மதிப்பெண் பெற்ற 9ம் வகுப்பு மாணவர்கள் ஜே.எம். சர்வேஸ்பாபு - எல்.கே. வீர்சேவாக் ஜோடிவெற்றி பெற்றது.பரிசளிப்பு விழாவில் தினமலர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை ஆசிரியர் சரத்ராம் வழங்கினார். முதல் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தேர்வு பெற்ற மாணவிகளுக்கு தினமலர் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியை ஆசிரியர்கள் ஜெயகுமரன், சிவம் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.கற்பகம் மெட்ரிக்ஆசிரியை பூர்ணிமா வினாடி வினா போட்டி நடத்தினார். அதிக மதிப்பெண் பெற்று மாணவர்கள் பி.மாதேஷ் (பிளஸ் 1) - பி.ஷாம் (9ம் வகுப்பு) ஜோடிவெற்றி பெற்றது.பரிசளிப்பு விழாவில் தினமலர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் சிவபாரதி வழங்கினார். முதல் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தேர்வு பெற்ற மாணவி களுக்கு தினமலர் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியை ஆசிரியர்கள் செல்வம், சிவராஜ், மீராபாய், செந்தில்குமார் ஒருங்கிணைத்தனர்.கந்தசாமி கொத்தனார் பள்ளிஆசிரியை கற்பகம் வினாடி வினா போட்டியை நடத்தினார். அதிக மதிப்பெண் பெற்ற 9ம் வகுப்பு மாணவிகள் எம்.சலீமாபேகம் - கே.நாகதர்ஷினி ஜோடி வெற்றி பெற்றது.பரிசளிப்பு விழாவில் தினமலர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை தாளாளர் நடராஜன் வழங்கினர். தலைமை ஆசிரியைகள் அமுதா, சுமதி (ஆரம்ப பள்ளி) முன்னிலை வகித்தனர். முதல் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தேர்வு பெற்ற மாணவிகளுக்கு தினமலர் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியை ஆசிரியைகள் வனிதா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.இந்நிகழ்ச்சிகளை போத்தீஸ், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், லோட்டே காபி பைட், குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து வழங்கின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X