திருப்புத்துார்: திருப்புத்துார் -- புதுக்கோட்டை ரோட்டில் சிறுகூடல்பட்டி விலக்கு அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் காயம் அடைந்தனர்.
நேற்று காலை 8மணிக்கு மதுரையிலிருந்து சிதம்பரத்திற்கு அரசு பஸ் சென்றது. திருப்புத்துாரை அடுத்து சிறுகூடல்பட்டி அருகே செல்லும் போது எதிரே நின்ற தனியார் பஸ்சை கடந்து வந்த டூ வீலர் மீது மோதாமல் தவிர்க்க அரசு பஸ்சை வளைத்த போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
அதில் பயணம் செய்த பயணிகளில் 5 பேர் காயம் அடைந்தனர். சிவகங்கை பிரபாகரன்40, மாடசாமி28, பாண்டிகுமார்43,செந்தில்குமார்50 ,முத்துராம்39, திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.