சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை முயற்சி நாடகம் ஸ்டேஷனில் பரபரப்பு

Added : டிச 04, 2019
Advertisement

திருப்பூர்:சேலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த, 19 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகியுள்ளார். நேற்று முன்தினம் இருவரும் திருப்பூருக்கு வந்தனர்.பல இடங்களில், சுற்றித்திரிந்த இருவரும், நேற்று மாலை, வடக்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சென்று தஞ்சம் அடைந்தனர்.
விசாரணையில், திருமண வயதை அடையவில்லை என தெரிந்தது. பெற்றோருக்கும் போலீசார் தகவல் அளித்தனர்.இச்சூழலில், வாலிபர் கழிப்பறை செல்வதாக கூறி சென்றவர், திரும்ப வந்து, தான் விஷம் அருந்தி விட்டதாகவும், மயக்கம் வருகிறது எனவும் கூறி கீழே படுத்து கொண்டார். அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை சோதித்தும், கழிப்பறைக்குள் சென்றும் பார்த்த போது, கழிப்பறை சுத்தம் செய்யும் ரசாயன பாட்டில் காலியாக இருப்பது தெரிந்தது.சில நிமிடங்களுக்குப் பின்னும் எந்த மாற்றமும் இல்லை. போலீசார் தன்னை பெற்றோரிடம் ஒப்படைத்து விடுவார்கள் என அஞ்சிய அவர், அதை தவிர்க்க போலீசாரை மிரட்ட, நாடகமாடியது தெரிந்தது. அவரை போலீசார் எச்சரித்து, சேலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X