சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருந்து கடையில் திருடியவர் கைது

Added : டிச 04, 2019
Advertisement

திருப்பூர்:மருந்து கடையை உடைத்து, திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.திருப்பூர் - காந்திநகர், ஆஷர் மில், லேபர் காலனியை சேர்ந்த சண்முகசுந்தரம், 37. இவர், பத்மாவதிபுரத்தில், மருந்துக்கடை வைத்துள்ளார். கடையை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்றார்.நேற்றுமுன்தினம், கடையை திறந்தபோது, மேற்கூரை உடைந்து கிடந்தது. மேஜையினுள் வைத்திருந்த, 30 ஆயிரம் ரூபாயை காணவில்லை.இது குறித்து, அவர் வடக்கு போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், எஸ்.ஏ.பி., தியேட்டர் அருகேயுள்ள மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சந்தோஷ், 37 என்பவரை கைது செய்து, 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X