சிவகங்கை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கு டிச.4 மற்றும் 5 தேதிகளில் காளையார்கோவில் துணை மின்நிலையத்தில் நடக்க இருந்த சான்றிதழ் மற்றும் உடல் தகுதித்தேர்வு மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மழை இல்லாதபட்சத்தில் டிச. 6ம் தேதிக்கு ஒதுக்கப் பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, அன்றைய தினமே தேர்வு நடக்கும் என்றுசிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் க.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.