பொது செய்தி

தமிழ்நாடு

ஜப்பான் தொழில்நுட்பத்தில் மரம் வளர்ப்பு: மாநில அரசு திட்டத்தில் பராமரிப்பு

Added : டிச 04, 2019
Advertisement

திருப்பூர்:'மியாவாகி' தொழில்நுட்பத்தில், தேசிய வேலை உறுதி திட்டத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.மாநிலத்தில், வறட்சியை போக்க தேசிய வேலை உறுதி திட்டத்தில், மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் வளர்ப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அரசு நிலத்தில், மரக்கன்று நட்டு, நுாறு நாள் திட்ட பணியாளர் மூலம், தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படுகிறது.ஜப்பானில் பின்பற்றப்படும், 'மியாவாகி' தொழில்நுட்பத்தில், குறைந்த நிலப்பரப்பில், அதிக மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டத்துக்கு, தமிழகத்தில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில், நுாறு நாள் திட்டத்தில், 'மியாவாகி' தொழில்நுட்பத்தில், மரக்கன்று நடும் பணி துவங்கியுள்ளது.தாராபுரம் ஒன்றியம், பொன்னாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, அரசு நிலம், 2 ஏக்கரில், 5,400 மரக்கன்றுகள் அடர்த்தியாக நடப்பட்டுள்ளது. கலெக்டர் விஜய கார்த்திகேயன், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் கூறியதாவது:நுாறு நாள் திட்டத்தில் மலைவேம்பு, புளி, புங்கன், நாவல், அத்தி, கொய்யா, நெல்லி, இலுப்பை உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடப்படுகின்றன. சாதாரணமாக நட்டால், 10 ஆண்டுகளில் மரமாகும் நாற்றுகள், 'மியாவாகி' முறையில், இரண்டே ஆண்டுகளில் மரமாகின்றன. அடர்வனம் உருவான பகுதியில், வெப்பநிலை குறையும்; மண்ணரிப்பு தடுக்கப்பட்டு, மண் வளம் காக்கப்படும்; பறவை, பூச்சி, புழுக்கள் உயிர்வாழ தகுதியான குறுங்காடுகள் உருவாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X