பாம்பு கடிக்கு மருந்து இல்லை: அரசு மருத்துவமனையில் அவலம்

Added : டிச 04, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர், தலைமை அரசு மருத்துவமனையில், பாம்பு கடிக்கு தடுப்பு மருந்து இல்லாததால், நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.திருப்பூர் சுற்றுப்பகுதி கிராமங்களில், அதிகப்படியான பரப்பில் விளைநிலங்கள் உள்ளன. இங்கு, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களும், காய்கறிகளும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.இதனால், இரை தேடி வரும் கண்ணாடிவிரியன், கட்டு விரியன் போன்ற விஷத்தன்மை கொண்ட பாம்புகள் அதிகம் காணப்படுகின்றன. அவ்வப்போது, சிலர் பாம்பு கடிக்கு ஆளாகின்றனர்.விஷத்தை முறிக்க போடப்படும், ஏ.எஸ்.வி., மருந்தின் விலை அதிகம் என்பதால், பெரும்பாலா னோர் அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.இந்நிலையில்,நேற்றுமுன்தினம், பாம்பினால் கடிபட்ட பெண், பெரிச்சிபாளையம், தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனை ஊழியர்கள், 'பாம்பு விஷ முறிவு மருந்து ஸ்டாக் இல்லை' என, தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது, அவரது உறவினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.தேவையான மருந்தை உடனடியாக கொள்முதல் செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X