பொது செய்தி

தமிழ்நாடு

சாகுபடி கருவி வாடகை மையம்: ரூ.60 லட்சம் மானியம் கிடைக்கும்

Added : டிச 04, 2019
Advertisement

திருப்பூர்:'அரசு மானியத்துடன், கரும்பு சாகுபடிக்கான வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்பும் விவசாயிகள் முன்வரலாம்' என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.மாநில அரசு உற்பத்தி, வியாபாரம், சேவை ஆகிய பிரிவுகளில், புதிதாக தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கிறது. அதற்காக, 30 சதவீதம் வரை, மானியம் வழங்கப்படுகிறது. அவ்வகையில், கரும்பு சாகுபடிக்கு தேவையான கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையம் அமைக்க, 60 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுமென, அரசு அறிவித்துள்ளது.கரும்பு பயிர் சாகுபடிக்கு, உயர்தொழில்நுட்பம் மற்றும் அதிக உற்பத்தி திறன் கொண்ட, அறுவடை இயந்திரம், 60 - 70 குதிரைத்திறன் கொண்ட உழுவை இயந்திரம், உழுவை இயந்திரத்துடன் கூடிய சட்டிக்கலப்பை, சுழற்கலப்பை, கொத்து கலப்பை, கரும்பு தோகையை துகளாக்கும் கருவி, கரும்பு தட்டைகளை மட்டமாக்கும் கருவி போன்ற பல கருவிகள் தேவை. அக்கருவிகளை, வேளாண் பொறியியல் துறையினர், அங்கீகரிக்கும் நிறுவனங்களில், விண்ணப்பதாரர் பெற்று, மையம் அமைக்கலாம். மொத்தம், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மையம் அமைத்தால், 40 சதவீதம் மானியம், அதாவது, 60 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மையத்தின் நான்காண்டு கண்காணிப்புக்கு பின், மானியத்தொகை விடுவிக்கப்படும்.'புதிய தொழில் முனைவோர், விவசாயிகள், இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 94435 46015 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X