பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 3ல் ஒரு பங்கு நீர் தேக்கப்பட்டுள்ளது  பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

Added : டிச 04, 2019
Share
Advertisement
ராமநாதபுரம்:ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 3 ல் ஒரு பங்கு நீர் சேர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கிட கிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழகத்தில் வீராணம் ஏரிக்கு அடுத்த பெரிய கண்மாய் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதிக்கு

ராமநாதபுரம்:ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 3 ல் ஒரு பங்கு நீர் சேர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கிட கிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் வீராணம் ஏரிக்கு அடுத்த பெரிய கண்மாய் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதிக்கு சருகணி, கோட்டக்கரையாறு, வைகை மூலமாக நீர் வரத்து ஏற்படும். தற்போது வைகை நீர் வரத்துக்கு வாய்ப்பில்லை. கன மழையால் கோட்டக்கரையாறு, சருகணி கால்வாய் வழியாக நீர் வரத்து உள்ளது.

24 கி.மீ., நீர் பிடிப்புள்ள கண்மாய் பகுதிக்கு தற்போது 20 கி.மீ., நீர் பரவியுள்ளது.மூன்றில் ஒரு பங்கு நீர் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்துள்ளது.தற்போது கண்மாய்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களிடம் இருந்து புகார் வரும் பகுதிகளில்உடனடியாக பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கண்மாய்கள் உடைப்பு ஏற்பட்டால் தேவையான பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதியில் போதிய அளவு நீர் உள்ளது.வைகை அணையில் இருந்து இரண்டாம் கட்டமாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் கேட்கப்பட்டு உள்ளது.கூடுதல் நீர் கிடைக்கும் பட்சத்தில் சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது, என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X