திண்டிவனம்:திண்டிவனம் தாசில்தாராக ராஜசேகர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.திண்டிவனம் தாசில்தாராக பணிபுரிந்து வந்த ரகோத்தமன், கள்ளக்குறிச்சி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்து வந்த ராஜசேகர், திண்டிவனம் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இவர் நேற்று, திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில், பொறுப்பேற்றுக் கொண்டார். தாசில்தாருக்கு, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க நிறுவனர் ராஜமாணிக்கம் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.