பொது செய்தி

தமிழ்நாடு

'சுதந்திரமாக செயல்படுங்க ஒத்துழைப்பு கிடைக்கும்': தைரியம் கொடுத்த கலெக்டர்

Added : டிச 04, 2019
Advertisement
 'சுதந்திரமாக செயல்படுங்க ஒத்துழைப்பு கிடைக்கும்': தைரியம் கொடுத்த கலெக்டர்

திருப்பூர்:''தேர்தல் பணியாற்றுவோர் சுதந்திரமாக செயல்பட வேண்டும்'' என, கலெக்டர் விஜய கார்த்திகேயன் பேசினார்.உள்ளாட்சி தேர்தல் பணி குறித்த பயிற்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் விஜயகார்த்திகேயன், பயிற்சியை துவக்கி வைத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி அலுவலருக்கான தேர்தல் கையேட்டை வெளியிட்டார்.அதை, திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், தாராபுரம் சப் -கலெக்டர் பவன்குமார், மகளிர் திட்ட அலுவலர் கோமகன், மற்றும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். பி.டி.ஓ., ரமேஷ், தேர்தல் பணி தொடர்பாக, 'பவர் பாயின்ட்' மூலம் பயிற்சி அளித்தார்.கலெக்டர் பேசியதாவது;தேர்தல் நடத்தும் அலுவலர்களே, உள்ளாட்சி தேர்தலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். மாநில தேர்தல் கமிஷனின் தலையீடு கூட இருக்காது. தேர்தல் நடத்தும் அலுவலர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், முன்கூட்டியே சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். சட்டம், ஒழுங்கு விவரங்களை ஆராய்ந்து, தேவையெனில் போலீஸ் பாதுகாப்பு பெற வேண்டும்.வரும், 6ம் தேதி காலை, 9:00 மணிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, மனுத்தாக்கலை துவக்க வேண்டும். காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை மனுத்தாக்கல் நடக்கும். கையேட்டில் உள்ள விதிமுறையை பின்பற்றி, தேர்தலை நடத்த வேண்டும். வேட்புமனு தாக்கல் நிறைவு நாள் வரை, வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம்.காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, தொடர்ச்சியாக, மனு தாக்கல் நடக்கும். உணவு இடைவேளை இல்லை. இடைபட்ட நேரத்தில் உணவருந்தி, தேர்தல் பணிகளை தொடர வேண்டும். ஒரு வேட்பாளர் ஒரு பதவிக்கு மட்டும் போட்டியிட முடியும்.தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உட்பட, தேர்தல் பணியில் உள்ளவர்கள், வேட்புமனு படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க கூடாது. வேட்பாளரே பூர்த்தி செய்து கொள்வதாக கூறினாலும், பணிவாக மறுத்துவிட வேண்டும்.விடுமுறை நாளாக அறிவிக்கப்படாத, சனிக்கிழமையும், 7ம் தேதியும் வேட்புமனு பெறலாம். வேட்பாளருக்கு முன்மொழிவு செய்பவர், சம்பந்தப்பட்ட ஊராட்சி வார்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். தேர்தல் அலுவலர்கள், வெளிப்படையாக, சுதந்திரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்; மாவட்ட நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X