பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : டிச 04, 2019
Advertisement
 மரக்கன்று நடும் விழா

கமுதி:கமுதி அருகே கோவி லாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் பாதை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா, இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள் குறித்த பயிற்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பாபு தலைமைவகித்தார். மக்கள் பாதை தாய்மண் திட்ட பொறுப்பாளர் குப்புராஜ், கமுதி ஒன்றியம் ஒருங்கிணைப்பாளர் யோகேசுவரன் முன்னிலை வகித்தனர்.

கமுதி நகர பொறுப்பாளர் யோககுமார் வரவேற்றார்.கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்மாணவர்கள் மூலம் 100மரகன்றுகள் நடப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து, விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் முத்துராகேஷ், ஆனந்தராஜ், சவுந்திரபாண்டியன், மக்கள் பாதை இயக்க பொறுப்பாளர்கள் சூரிய பிரகாஷ், வல்லரசு, சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X