சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

Added : டிச 04, 2019
Advertisement

செஞ்சி:செஞ்சியில் கால் கழுவ குளத்தில் இறங்கிய கூலித் தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.செஞ்சி பெரியகுளம் ரங்கசாமி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ், 42; கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை 10:00 மணியளவில் செஞ்சி பேரூராட்சி அருகே உள்ள நவாபு குளத்தில் கால் கழுவ இறங்கினார்.அப்போது தவறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிருஷ்ணராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X