ஆதார் திருத்தம் செய்ய முடியாமல் மாணவர்கள் தவிப்பு

Added : டிச 04, 2019
Advertisement

முதுகுளத்துார்:முதுகுளத்துார் தாலுகா அலுவகத்தின் கீழ்தளத்தில் ஆதார் மையம் உள்ளது. இங்கு ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்ததேதி, அலைபேசி எண் ஆகியவற்றை மட்டும் திருத்தம் செய்து வந்தனர்.

இம்மையத்தில் புதிதாக ஆதார் அட்டை எடுப்பதில்லை.தற்போது ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற இருப்பதால் மாணவர்களின் சான்றிதழில் இருப்பது போல் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும்.முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில்உள்ளஆதார் மையம் கடந்த 15 நாட்களாக சர்வர் பிரச்னையால் பூட்டிகிடக்கிறது.

முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்து மாணவர்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காக 15 கி.மீ.,ல் உள்ள கடலாடி, கமுதி தாலுகா அலுவகம் செல்கின்றனர்.சில நேரங்களில் நெட்வொர்க் பிரச்னை ஏற்படுவதால் நாள் முழுவதும் காத்து இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் கல்லுாரி செல்வதற்கு சிரமமாக இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

மாணவர்களின் நலன்கருதி முதுகுளத்துார் தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து உடனடியாக திறக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X