பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழையின் போது விபத்துக்களை தவிர்த்திட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆலோசனை

Added : டிச 04, 2019
Advertisement

விழுப்புரம்:வடகிழக்கு பருவமழையின் போது, மின்தடை மற்றும் மின் விபத்து ஏற்படாமல், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் காளிமுத்து செய்திக்குறிப்பு:விழுப்புரம் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள களப்பணியாளர்கள் இயற்கை இடர்பாடுகளின்போது, துரிதமாகவும், உடனடியாகவும் நிவர்த்தி செய்வதற்கு, தளவாடப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின்தடை மற்றும் மின்சார பொருட்கள் சேதாரம் போன்ற புகார்களை, மின்தடை நீக்கும் மையத்தின் இலவச அழைப்பு எண் 1912 அல்லது 1800 4255419 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.மேலும், அறுந்து தரையில் கிடக்கும், மேல்நிலை மின் கம்பிகள், தாழ்வு மற்றும் தொய்வான மின் கம்பிகளை பொதுமக்கள் தொடக்கூடாது. மின்சார்ந்த பொருட்களில் தன்னிச்சையாக செயல்படாமல், மின்வாரியப் பிரிவு அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும்.மின்னல், இடி ஏற்படும்போது 'டிவி', மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகே நிற்கக் கூடாது. ஈரமான கைகளுடன் மின் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளை இயக்குதல் கூடாது. மின்கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டி வைக்கக் கூடாது.மழைக்காலங்களில், மின்மாற்றிகள் மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லக் கூடாது. மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சித்தல் கூடாது.மின் கம்பத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்டே ஒயர்களின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி, கயிறு கட்டி துணிகளை உலர்த்துதல் கூடாது. குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில், மின் சுவிட்சுகளை பொருத்துதல் கூடாது. மின்னல், இடியின் போது தஞ்சம் அடைய மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி ஆகியவை இல்லாத பகுதிகளை தேர்வு செய்ய வேண்டும்.உயரமான மரங்களின் கீழ், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களின் அருகே, இரும்பு தகடு போடப்பட்ட கட்டடங்களின் கீழ் திறந்த வெளியில் நிற்கக் கூடாது. அவசர நேரங்களில் மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிட அமைத்தல் வேண்டும்.பருவமழைக் காலங்களில், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர் மற்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, மின் விபத்துக்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X