பஸ் கவிழ்ந்து 16 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் கவிழ்ந்து 16 பேர் காயம்

Added : டிச 04, 2019
Share
உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே புறவழிச் சாலையில் ஆம்னி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பேர் படுகாயமடைந்தனர்.சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு பொள்ளாச்சி நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில் உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் விருத்தாசலம் செல்லும் சாலை மேம்பாலம் அருகே சென்றபோது,

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே புறவழிச் சாலையில் ஆம்னி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு பொள்ளாச்சி நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில் உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் விருத்தாசலம் செல்லும் சாலை மேம்பாலம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் பஸ்சில் பயணம் செய்த சேலம் கோவிந்தராஜ், 52; அவரது மனைவி கற்பகம் 56; திருப்பூர் ஜெயஸ்ரீ, 48; சஞ்சய்பிரகாஷ், 23; உட்பட 16 பேர் காயமடைந்தனர்.உடன் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X