ஆற்றின் கரையோரத்தில் ரோடு தடுப்புகள் சேதம்: 12 கி.மீ., சுற்றி பயணிக்கும் அவலம்

Added : டிச 04, 2019
Advertisement
 ஆற்றின் கரையோரத்தில் ரோடு தடுப்புகள் சேதம்: 12 கி.மீ., சுற்றி பயணிக்கும் அவலம்

கமுதி:கமுதி அருகே ஆற்றின் கரையோரத்தில் ரோட்டின் தடுப்பு கற்கள் சேதமடைந்துள்ளதால், மழைக்காலங்களில் பயணிக்க முடியாமல் 12 கி.மீ., சுற்றி பயணிக்கும் அவலம் உள்ளது.

பேரையூர் அருகே கொல்லங்குளம், புல்வாய்க்குளம் பகுதியில்குண்டாற்றின் கரையோரங் களில் ரோடு வசதி உள்ளது. இந்த ரோடு வழியாக சிறுமணியேந்தல், மாங்குடி, ஆத்திகுளம், புல்வாய்க்குளத்திற்கு குறைந்த துாரத்தில்போக்குவரத்து வசதிஇல்லாததால், பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் பயணிக்கின்றனர்.

ஆனால் ஆற்றின் கரையோரம்ரோட்டின் பக்கவாட்டில் அமைக்கபட்ட தடுப்பு கற்கள் சேதம் அடைந்து சிதறி கிடக்கிறது.இதனால் மழை காலங்களில் கிராவல் ரோட்டில் மண் அரிப்பு ஏற்பட்டு, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகரோடு உருக்குலைந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் முதுகுளத்துார், அபிராமம் வழியாக 12 கி.மீ., சுற்றி பயணிக்கும் அவலம் உள்ளது.எனவே குண்டாற்றின் கரையோரங்களில் சேதமடைந்த ரோட்டையும், தடுப்பு சுவரையும் சீரமைத்து, தார் ரோடு அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X