பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி பகுதியில் பரவலான மழை சொட்டு நீர் பாசன பைப் லைன்களுக்கு ஓய்வு

Added : டிச 04, 2019
Advertisement
 கள்ளக்குறிச்சி பகுதியில் பரவலான மழை சொட்டு நீர் பாசன பைப் லைன்களுக்கு ஓய்வு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நீர் ஆதாரங்களில் தண்ணீர் பெருகுவதால், வயல்வெளிகளில் அமைக்கப்பட்டிருந்த சொட்டு நீர் பாசன பைப்களை விவசாயிகள் அகற்றியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி பகுதியில் சில நாட்களாக பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள அணைக்கட்டுகள், ஏரிகள், கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.கோடை காலத்தில் நிலவிய வறட்சியால் தண்ணீர் இன்றி விவசாயம் பாதிப்படைந்தது. இதனால் குறைந்த நீர் மூலமாக பாசனம் செய்யும் சொட்டு நீர் பாசனத்திற்கு விவசாயிகள் மாறினர். அத்துடன் அரசு மானியமும் கிடைப்பதால் தண்ணீர் குறைவான சொட்டு நீர் பாசனத்துக்கு கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் முற்றிலுமாக மாறியிருந்தனர்.கள்ளக்குறிச்சி பகுதியில் துவக்கம் முதலே வடகிழக்கு பருவமழையும், போக்கு காட்டியதால் விவசாயிகள் கலக்கம் அடைந்திருந்தனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ மழை அதிகரித்து பரவலாக பெய்ததால் கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாமல் தவித்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.இதனால் வறண்டு காணப்பட்ட விவசாய நிலங்களில் தண்ணீரை முழுமையாக நிரப்பி அடுத்த பருவத்திற்கான பாசன பணிகளைத் துவக்கியுள்ளனர். மேலும் சொட்டு நீர் பாசனத்திற்காக பரப்பி வைக்கப்பட்ட பைப் லைன்களை அகற்றி அதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இறவை பாசனத்திற்கு விவசாயிகள் நம்பிக்கையுடன் தயாராகி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X